Tuesday 29 September 2020

SGR232

பெற்றோர்கள், 5 முதல் 10 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு, புராண-வரலாற்று நீதி கதைகளை அலுப்பு-சலிப்பில்லாமல் கூற வேண்டியது, ஒரு நல்ல குடிமகனை உருவாக்க ஆற்ற வேண்டிய பங்களிப்பு. பெற்றோர்கள்; தொலைக்காட்சியை புறக்கணித்து விட்டு, குழந்தைகளுடன் பழக வேண்டியது; அவர்களுடன் அதிக நேரம் செலவிட வேண்டியது, மிக மிக அவசியம். தொலைக்காட்சியை புறக்கணித்து விட்டு, குழந்தைகளுடன் விளையாடுவோம்!

ஒரு ஆண்மகனின் நடத்தை, அவனை பெற்று-வளர்த்த தாயாரின் குணத்தின் பிரதிபலிப்பு. ஒரு பெண்ணின் நடத்தை, அவளை பெற்று-வளர்த்த தந்தையின் குண பிரதிபலிப்பு. பெற்றோர்கள், தாங்கள் ஆற்ற வேண்டிய கடமைகளை மறந்து, புறக்கணித்து விட்டு, சமூகத்தை பழிப்பது அறிவீனம். நம் வாழ்க்கை, உல்லாசத்திற்கான சமயம் அல்ல, நம்மை உணர்ந்து கொள்ள செயல் படுவதற்கான யோகக்களம்.

தற்காலத்தில் எத்தனை இல்லங்களில், அதிகாலை

    துயிலெழுகிறார்கள்?

    வேங்கடேச சுப்ரபாதம் ஒலிக்கின்றது?

    பச்சரிசி மாவில் கோலம் இடப்படுகின்றது?

    சாம்பிராணி புகை இடப்படுகின்றது?

    பூஜை அறையில் விளக்கேற்றி நிவேதனம் செய்யப்படுகின்றது?

வாழ்க்கை நெறி-முறைகள் எங்கே தொலைந்தன?

இல்லங்களில் அதிகாலை வேங்கடேச சுப்ரபாதம் ஒலிக்க காரணம்; கேவலம் பெருமாளின் மீது கொண்ட பற்று, அல்லது ஸ்ரீவைஷ்ணவர் என்பது காரணம் அல்ல. சநாதன தர்மத்தின் கூற்றின் நியதி, காலையில் பெருமாளையும், இரவில் பரமசிவனையும் வணங்க வேண்டியது கடமை!

அதிகாலை, பெருமாள் கோவிலுக்கும், மாலை பரமசிவனின் கோவிலுக்கும் தரிசனம் செய்ய செல்ல வேண்டியது கடமை. உலக வாழ்க்கை நன்முறையில் அமைய, பெருமாளை வணங்கி தொடங்க வேண்டியது., அபரவாழ்க்கை நன்முறையில் அமைய, பரமசிவனை வணங்கி இரவை கழிக்க வேண்டியது.

நாம் தொலைக்காட்சிக்கு அடிமையாகாமல் இருந்தால், தொலைக்காட்சிகளை புறக்கணித்தால், இரவில் நிம்மதியாக உறங்கி, அதிகாலை துயிலெழ சாத்தியமே! எவருமே, தங்கள் தர்மத்தின் கடமைகளை செய்ய இயலாமைக்கு நேரமின்மையை காரணமாக கூற நியாயமில்லை!

இரவு 9 மணிக்கு துயில் கொண்டு, அதிகாலை 4 மணிக்கு துயிலெழுந்து, தெய்வத்தின் நினைவுடன் கடமைகளை செய்து, அத்தனையும் இரவில், இறைவனுக்கே அற்ப்பணித்து விட்டு, அமைதியுடன் உறங்க சென்றால், நிம்மதி நிச்சயம்

நம் வாழ்வின் 'வில்லன்' தொலைக்காட்சிகள்.

https://sabariganesh23.sarahah.com/

Thursday 17 September 2020

SGR231

Strong and sustained (State and Central) government impetus to food processing sector is a vital prerequisite to manage food price inflation. Expecting government owned food processing units in every district of every state. Procure surplus from farmers and churn out processed food. A strong and sustained initiative to establish government owned food processing units is essential to manage food price inflation - the only way to balance food price to remain neither too low nor too high; and independent of seasons.

The government could establish MoU; procure food products from farmers directly at a nominal price that is neither too low nor too high, ensuring them a decent and planned living; process the produce at government owned processing units and market them through its channels.

We have seen instances when farmers throw away tomatoes on the road instead of selling them at Re.1/= a kilo; and times when tomatoes sell at Rs.150/= a Kilo. State owned food processing centres can balance both the scenario and manage food price inflation. State Owned Food Processing Centres has the potential to redefine and revamp the existing vegetable markets in every locality for the betterment of every party associated.

This is exactly what happened with milk - times when milk would be available only during select period of the day is done away by processing them to be available throughout the day, at a reasonable price based on sustained and specific quality! If that which is done with milk - the white revolution / Operation Flood, could be done with vegetables too; would be a factor of progress for the nation as a whole. Agriculture is the spine of India and hence our natural advantage!

https://sabariganesh23.sarahah.com/

Friday 11 September 2020

SGR230

வாரத்தைகளை புரட்டினால், கவிதை.

தூரிகையை புரட்டினால், ஓவியம்.

ஸ்வரங்களை புரட்டினால், இசை.

அவயவங்களை புரட்டினால், நாட்டியம்.

அழகு அமைந்திருப்பது முறைப்படுத்தப்பட்ட புரட்டலிலேயே!

https://sabariganesh23.sarahah.com/