Friday 27 November 2015

SGR192



தேங்காய் தன்னை கல்லில் அடித்து உடைத்தவனுக்கு இளநீரும், பருப்பும் தருகிறது. மெழுகுவர்த்தி தன் உடல் கருக நெருப்பிட்டவனுக்கு ஒளி தருகிறது. அகழ்வாறை தாங்கும் நிலமோ, உயிர் நீர் தருகிறது. நியாயமான தேவைக்கு அதிகமாக அனுபவிப்பவன்; எங்கோ ஒரு ஏழையை உற்பத்தி செய்கிறான்.
https://sabariganesh23.sarahah.com/ 

SGR191



கலை மனிதனின் மனத்தை நல்வழிப்படுத்தி, செழுமையாக்க வேண்டும். கலைஞன் காசுக்கு அடிமையாகி, காரணங்கள் தொடுத்து, கலையை வியாபாரமாக்கினால், அதுவே விபச்சாரம்! கலையின் நோக்கம் மனித மனங்களில் நல்ல எண்ணங்களை வளர்ப்பதுவேயாம்.
https://sabariganesh23.sarahah.com/ 

Tuesday 24 November 2015

SGR189



கடல் கடந்து சில்லரை காணினும், கல்லறை மட்டுமே; நன் முறையில் சேர்த்த புண்ணியமோ, அதையும் கடந்து துணை வரும்.
https://sabariganesh23.sarahah.com/ 

SGR188



ஒரு நடிகன் பல வேடம் புனைந்தாலும், உள்ளிருக்கும் அவன் ஒருவனே; அது போலவே, எத்தனை உயிர்கள் இந்த உலகத்தில் இருப்பினும், உள்ளிருக்கும் ஆத்மா ஒன்றே! அத்வைதம்.
https://sabariganesh23.sarahah.com/ 

SGR187



தேவைகள் குறைந்தால், நிம்மதி!  
தேவைகளை கடந்தால், ஆனந்தம்!!
https://sabariganesh23.sarahah.com/