சாகர சங்கமம்
நான் உன்னை கொஞ்சினால், நீ என்னை நேசிப்பாய் எனில்;
நான் உன்னை திட்டினால், நீ என்னை வெறுப்பாய் எனில்;
நீ உன்மையில் நேசிப்பது, என்னை அல்லவே!
நான் உன்னை சிரிக்கவைத்தால், நீ என்னை நேசிப்பாய் எனில்;
நான் உன்னை அழவைத்தால், நீ என்னை வெறுப்பாய் எனில்;
நீ உன்மையில் நேசிப்பது, என்னை அல்லவே!
விருப்பும் வெறுப்பும் கடந்த என் செயல்கள், என்றென்றும்
–
உன் நன்மைக்கே; நீ இதை ஆமோதித்தாலும், அவமதித்தாலும்;
எனக்கு எந்த பாதிப்பும் அல்லவே!
கானல் நீரை போன்று தோன்றி மறையும் இவ்வுலக –
வாழ்வில்; வரவு எது, செலவு எது; லாபம் ஏது, நஷ்டம் ஏது;
எல்லாம்
இந்த ஒருவனின் விளையாட்டல்லவோ!
நிமிடத்திற்கு எழுபத்திரண்டு முறை துடித்து துடித்து என்னை
–
வாழ வைத்துக்கொண்டிருக்கும் என் இதயமே – உன்
தயவில் அடியேன் எனில்; என் தயவுக்கு பொருள் ஏதும் அல்லவே!
என் உடலின் ஒரு பொருளாய் துலங்கும் என் இதயமே –
நீயே என் சொல்லுக்கும் செயலுக்கும் அப்பாலெனில்;
என் சொல்வாக்கு எங்கே - செல்வாக்குத்தான் எங்கே? – வெறும்
மாயை!
கூடு விட்டு ஆவி பறந்து பொகுமே, அந்த பாவி யமன் வந்தால்;
கூட்டை சாம்பலாக்கி; திருநீர் அணிந்து அழகு பார்க்குமே இவ்வுலகமும்;
இதில் உற்றார் யார், உறவு யார்; உடன் வரபோவதுதான் யாரோ!
நல்லதும் தீயதும் நானறியேன்; நன்மையும் தீமையும் நானுனறேன்;
அறிவும், பொருளும், துணிவும் கடந்து; பயிற்சியும், முயற்சியும்
அற்று –
உன் நினைவு ஒன்று இருக்க கண்டேன்; அது போதுமே, என் குரு தேவா...
சம்சார வெள்ளம் வடிந்து; இந்த ஜீவனும் கடைதேறுமே – உன் அருளால்!
சத்குருதேவா சரணம்.
https://sabariganesh23.sarahah.com/