இன்று (ஹேவிளம்பி வருடம்; ஆடி மாதம்; 29ஆம் நாள்) திரு.அப்துல் ஹமீது
அவர்கள் ஆற்றிய உரை குறித்து
சிந்தித்தேன். தமிழ் - தமிழில், படித்தால்;
வெளி மாநிலத்திலோ, வெளி நாட்டிலோ; அறிவியல்
- தொழில்நுட்பம் சார்ந்த வேலை வாய்ப்புகள்
இல்லை என்பது ஈடு செய்ய
இயலாத ஒரு குறையாகவே உள்ளது;
என்று குறிப்பிட்டார்.
இதற்கான காரணம்; நம்முடைய
அறியாமையால் உண்டான, நமக்குள் உண்டான,
காரணமற்ற வெறுப்பும் - விரோதமும் தான். வெள்ளையனின் பிரித்தாளும்
சூழ்ச்சியின் தாக்கத்தில் இருந்து, நாம் இன்னும் மீளவே
இல்லை. நம்மை ஆளும், விஷயம்
தெரிந்த உள்நாட்டு பெரிய மனிதர்களும், அவர்களின்
சுயநலம் கருதி, நம்மை மீட்க
விரும்பவில்லை, முயலவுமில்லை; மாறாக, இந்த வெறுப்பையும்
- விரோதத்தையும் வளர்க்கவே செய்தார்கள்.
நம் பாரத திருநாட்டின்
ஆதிகால கல்வி முறை - அஷ்டாதச
வித்யை - எனும், வேத - வேதம்
சார்ந்த கல்வி முறை. இன்று
நாம் காணும் அறிவியல் - தொழில்நுட்பம்
- தொழில்முறை, அனைத்தின் மூலமும் வேதத்தில் உள்ளவைதான்.
எதுவுமே நமக்கு புதிதானவையோ - புதிரானவையோ
அல்ல. ஆனால், நாம் வெள்ளையனின்
சூழ்ச்சிக்கு பலியாகி, என்று வேதத்தையும் - பிராமணர்களையும்
- சமஸ்கிருதத்தையும் விரோதித்துக் கொண்டோமோ; அன்றே நம் சிறப்பு
நம்மை விட்டு அகல துவங்கிவிட்டது.
வேத மொழி சமஸ்கிருதம்
அல்ல. வேத மொழி சந்தஸ்.
சந்தஸ் என்பது சப்தத்தின் கால
அளவு - சந்தம் - ஆங்கிலத்தில் 'மீட்டர்'. சமஸ்கிருதத்தின் வேர் சந்தஸ். நமக்கு
தமிழ் தாய் என்றால், தந்தை?
சமஸ்கிருதம்! தமிழும் - சமஸ்கிருதமும் தங்களுள் தங்கு-தடையின்றி சொற்களை
பரிமாரிக்கொண்டுள்ளன. உதாரணம்; நாம் பயன்படுத்தும் 'ஆணி'
என்ற சொல் தமிழே அல்ல;
அது சமஸ்கிருதம். தமிழில் இதற்கு நிகரான
வார்த்தை இல்லை.
இன்று தமிழ் மொழி
நலிந்து காணபடுவதன் காரணம்; நாம் வேதத்தையும்
- சமஸ்கிருதத்தையும் விரோதித்து கொண்டதுதான். தந்தை சமஸ்கிருதத்தின் நலிவு
- அழிவு; நம் தாய் விதவை
ஆவதுதான். வைதவ்யம் அடைந்த நம் தாய்
அழிந்து கொண்டிருப்பதில் வியப்பு ஏன்? நம்
தந்தையையும் - தாயையும் கொல்லும் மக்களாக நாம் இருப்பதால்,
இது கலியுகம் என்பது பொருத்தமாகத்தானே உள்ளது?!
இதிலிருந்து மீள ஒர் வழிதான்
உண்டு. வேதம் பரவ வேண்டும்
- வேத நெறி பல்கிபெருக வேண்டும்.
நம்முள் புதைந்து, கணன்று கொண்டிருக்கும் அர்த்தமில்லா
விரோதமும், வெறுப்பும்; ஆழ்ந்த புரிதலின் அடிப்படையில்
மறைய வேண்டும். இதற்கு நாம் அனைவரும்
ஒன்று கூடி, ஆவன செய்ய
வேண்டும். மகவாகிய நமக்கு, தாய்
வேண்டுமா - தந்தை வேண்டுமா என்றால்
எப்படி? நமக்கு இருவரும் இரண்டு
கண்கள். இரண்டு கண்களும் இணைந்து
ஒர் காட்சி காண, நாம்
முயன்றால்; தமிழ் வாழும்.
https://sabariganesh23.sarahah.com/