Thursday 10 February 2022

SGR237


மறந்து விட்ட சிறு தர்மங்கள்:

1. நிதமும் அரிசி உலை வைக்கும் சமயம், ஒரு பிடி அரிசியை தனியே சேமித்து, மாதம் ஒரு முறை ஆலயத்தில் சமர்ப்பிப்போமே.

2. அரிசி சோறு சமைத்த பின், உணவருந்தும் முன், ஒரு கவளம் சோற்றை, பிராணிகள் - பறவைகள் உண்ண வீட்டின் வெளியில் வைப்போமே.

3. பறவைகள், விலங்குகள் தாகசாந்தி செய்து கொள்ள, ஒரு மண் குடுவையில், நிதமும் சுத்தமான குடிநீர் வைப்போமே.

4. வீட்டின் வாசலில், அரிசி மாவில் கோலம் இடுவோமே. அரிசி மாவு சிறு உயிரினங்கள் பசியாறும் உணவு.

5. வீட்டின் பூஜை அறையில்/அலமாரியில், வீட்டின் வாயிற்படியின் இருபுறமும், துளசி மாடத்தில், நிதமும் காலை - மாலை அகல் விளக்கேற்றி வைப்போமே.

6. நிதமும் அதிகாலை துயிலெழுந்து குளித்து, விளக்கேற்றி, வீடு முழுவதும் சாம்பிராணி தூபம் இடுவோமே.

 https://sabariganesh23.sarahah.com/

No comments:

Post a Comment