Tuesday, 24 November 2015

SGR188



ஒரு நடிகன் பல வேடம் புனைந்தாலும், உள்ளிருக்கும் அவன் ஒருவனே; அது போலவே, எத்தனை உயிர்கள் இந்த உலகத்தில் இருப்பினும், உள்ளிருக்கும் ஆத்மா ஒன்றே! அத்வைதம்.
https://sabariganesh23.sarahah.com/ 

SGR187



தேவைகள் குறைந்தால், நிம்மதி!  
தேவைகளை கடந்தால், ஆனந்தம்!!
https://sabariganesh23.sarahah.com/ 

SGR186



உலகாயத அறிவின் ஆதிக்கத்தில் அஹங்காரம் விளைந்து, கயமை தழைத்து, அழிவு சாகுபடி ஆகும்!
பக்தியின் ஆதிக்கத்தில், பணிவு விளைந்து, சகிப்புத்தன்மை தழைத்து, அமைதியும் நிம்மதியும் சாகுபடி ஆகும்!
https://sabariganesh23.sarahah.com/ 

Wednesday, 18 November 2015

SGR185



The perception of beauty depends on one's ability to relate to an external entity in a positive manner!
https://sabariganesh23.sarahah.com/ 

Tuesday, 7 July 2015

SGR184




ஆசைப்பட்ட வாழ்க்கை வாழ்வது முக்கியமல்ல; நாம் நம்முடைய வாழ்க்கையை நேர்மையாகவும், தர்மத்திற்க்கு இசைவாகவும் வாழ்ந்து கொண்டு இருக்கிறோமா என்பதே முக்கியம்.
பணம் நிலையற்றது. பணத்தால் கிடைக்கும் சொகுசு வாழ்வை ரசிப்பது அறிவிலியின் செயல். செல்வம், சுகம் எல்லாம் அறிவையோ, ஆற்றலையோ பொறுத்து அடையப்படுவது இல்லை; வினைப்பயனால் விளையும் பாக்கியத்தால், காலப்படி வருகின்றன.
ஒரு உறவுமுறை உருவாகும் சமயம், அதில் சம்மந்த்தப்பட்டவர்கள் அந்த உறவை கண்ணியமான முறையில்; உண்மையாகவும், வெளிப்படையாகவும், நிச்சயமாகவும், உலகுக்கு தெரிவிக்கும் பண்பில், அந்த உறவுமுறை மரியாதையோடு நிலைபெற்று; புரிந்துக்கொள்ளப்படும்.
https://sabariganesh23.sarahah.com/