ஒரு மடாதிபதி
என்பவர், ஒரு சந்நியாசி. அவர் மெத்தையில், கைகளுக்கு திண்டுகளுடன் அமர்ந்து ஊடகங்களுக்கு
பேட்டி அளிக்கிறேன் பேர்வழி என்று மடத்தின் (தன்) செல்வாக்கு, செல்வசெழிப்பு, அதிகாரத்தை
வெளிப்படுத்துதல்; அசிங்கம்.
இந்த மடத்தின்
முயற்சியின் விளைவாக, இவ்வளவு தர்ம ஸ்தாபனங்கள் உருவாக்கப்பட்டுள்ளன; மக்களுக்கு இவ்வளவு
நன்மை ஏற்பட்டுள்ளன, என்று தம்பட்டம் அடிப்பது அகங்காரத்தின் வெளிப்பாடு. ஒரு சந்நியாசி
எந்த சூழ்நிலையிலும், எம்முறையிலும் தன்னை முன்நிறுத்திக்கொள்வது முறை அல்ல.
மடாதிபதிகளும்,
மடங்களும்; நேரிடையாக சமூக சேவை என்ற பெயரில் நிறுவனங்களை நடத்துதல் விபரீதம். மடாதிபதிகள்,
தங்கள் ஆத்மீக ஒளியால் மக்களை நல்வழிபடுத்துதல் வேண்டும். மக்களால், மக்களுக்கு நன்மை
ஏற்படும் முறையில், மடாதிபதிகள் இயங்க வேண்டுமே அன்றி, அவர்களே நேரிடையாக காரியத்தில்
ஈடுபடுதல் பொருத்தமற்ற செயல்.
https://sabariganesh23.sarahah.com/
No comments:
Post a Comment