Friday, 4 July 2025

SGR259

 

பிராம்மணர் கோவில் - தெய்வம் என அமைத்து, மற்ற ஜாதியினரை, ஆலயத்தின்னுள் பிரவேசிக்க தடை விதித்து, மட்டம் தட்டி, தன்னை மட்டுமே உயர்த்தி, அநீதி செய்து விட்டனர்., என சமூக நீதி வேண்டி புலம்பும் மக்களே.,

நிதானிக்க...

பிராம்மணர் வணங்கும் எந்த தெய்வமும், பிரம்மணர் அல்ல.

கோவில், சாஸ்திரம், ஜாதி முறை என விதித்த சநாதன தர்மம், பிராம்மணரை மட்டுமே உயர்த்தி, மற்ற ஜாதியினரை மட்டம் தட்டி விட்டதாக நினைக்க, எந்த பிராம்மணரையும் தெய்வம் என கொண்டாடவில்லை.

உடல் உபாதை நீங்க மருந்து உட்கொள்ளும் சமயம், மருத்துவர் விதிக்கும் பத்தியமும், ஆகார நியமமும் அவசியம், அதிமுக்கியம்.

பத்தியம், ஆகார நியமம், விலக்கப் பட்ட உணவுக்கு செய்யும் அநீதி அல்ல.

சில பலன்கள் வேண்டி செய்யும் காரியங்களுக்கு, சில நியமங்கள் அவசியம். அது தீண்டாமை அல்ல. உதாரணம், மழை வேண்டி செய்யும் வருண ஜபம் பலிக்க வேண்டும் எனில், அது சமயம் உட்கொள்ளும் ஆகாரத்தில் உப்பு விலக்கப் பட வேண்டும். இது உப்புக்கான தீண்டாமை அல்ல.

செய் தொழிலால் குல தர்மம், வர்ண விபாகம். ஒரு சாமானிய குடிமகனின் உணவு பழக்க வழக்கங்கள், ராணுவ வீரனுக்கு ஒவ்வாது. இதில், உயர்வு-தாழ்வு எங்கு நுழைந்தது?

சில அரசியல்வாதிகள், தங்கள் சுய நலத்திற்காக, தங்களை முன்னிறுத்திக் கொள்ள, ஜாதி-இன-பேத அரசியலை கையாளுகின்றனர். இது மக்களை முட்டாளாக்கும் தந்திரம்.

அரசியலின் நோக்கம், மனித குல சேவை; சுய நல ஆதாயம் அல்ல.

எந்த அரசியல்வாதி மக்களை ஜாதி, இனம், உயர்வு, தாழ்வு, சமூக நீதி என கதை கட்டி பிரித்து சூழச்சி அரசியலில் ஈடுபடுகின்றாரோ... அவர், மனித குல துரோகி. அடையாளம் கண்டு கொண்டு, அவர்களை விலக்கி, மக்களை முன்னேற்ற உழைக்கும் அரசியல்வாதிகளுக்கு வாய்ப்பளிப்போம்.

பிராம்மணர் ஆலயம் அமைத்து, ஜாதி பாகுபாடு செய்து, தாழ்ந்த ஜாதி என ஒதுக்கி ஆலயத்தினுள் பிரவேசிக்க தடை விதித்து, தன்னை மட்டுமே உயர்த்தி, மற்றவர்களை மட்டம் தட்டி விட்டனர் என புலம்பி, சநாதன தர்மத்தை வெறுக்கும் மக்களே; நிதானிக்க...

பிள்ளையார் - முழு முதற் கடவுள். பிடித்து வைத்தால், பிள்ளையார். எங்கு, எந்த நற்காரியம் செய்ய உத்தேசித்தாலும், பிள்ளையாரை வணங்கியே மற்றதெல்லாம். பிள்ளையாரை வணங்க எந்த தடையும் இல்லையே, சாஸ்திரமும் தேவை இல்லை, சம்பிரதாயமும் அவசியம் இல்லை. இதுவும், சநாதன தர்மம் தான் விதித்துள்ளது.

தாழ்ந்த, தீண்ட தகாத, ஒடுக்கப்பட்ட, நசுக்கப்பட்ட ஜாதியினருக்கு, பிராம்மணர் மதிக்கும் சநாதன தர்மம், முழு முதற் கடவுளான பிள்ளையாரை தந்துள்ளதே! பிடித்துக் கொள்வோமே! பிற மதங்களுக்கு மாறுவானேன்? பிடித்து வைத்தால் பிள்ளையார். தெய்வம் எட்டும் நிலையில் உள்ளது, நம்மிடம் பக்தி உள்ளதோ?! ???

பிராம்மணர் வராதே என கூறிவிட்ட ஆலயங்களுக்கு செல்ல வேண்டும் என ஏன் அலைய வேண்டும்? நம்மிடம் உள்ள மண்ணை பிடித்து வைத்தால், பிள்ளையார் வந்து விட்டாரே! வேறு என்ன வேண்டும்? நமக்கென்ன கவலை?

சிந்திப்போம்.

பிரிவினை விதைக்கும் அரசியல்வாதிகளை அடையாளம் கண்டு, விலக்குவோம். முன்னேறுவோம். சுபம்.

https://sabariganesh23.sarahah.com/ 

 

 

No comments:

Post a Comment