Tuesday, 19 March 2024

SGR250

அடைப்பட்டு கிடக்கும் இடத்தில் இருந்து வெளியே வர, மிக உயர்ந்த எண்ணிக்கை வேண்டும்.
 
வெளியே வந்து, பயணத்தை துவங்கினால், உதவிக்கு எவரும் கிடையாது.  
 
எல்லோருடைய முயற்சியும், நம்மை வீழ்த்தி, மீண்டும் அடைக்கவே இருக்கும்.
 
சில இடங்களே பாதுகாப்பானாவை., அதுவும், சில காலத்திற்கு மட்டுமே, இளைப்பாற.
 
எத்தனை முறை வீழ்த்தப்பட்டு, அடைக்கப்பட்டாலும், மீண்டும், மீண்டும், உயர்ந்த எண்ணிக்கை கொண்டு வெளியேறி, சாதுர்யமாக பயணித்து, வீட்டை அடைய வேண்டும்.
 
யாருக்கு, எப்பொழுது, எந்த எண்ணிக்கை கிடைக்கும் என தெரியாது – அது விதி!
 
கிடைத்ததை கொண்டு, சாதுர்யமாக பயணித்து, வீடு பேறு பெற வேண்டும்.
 
அது தான், பகடை ஆட்டம், எனும் தாயக்கட்டை!
 
 https://sabariganesh23.sarahah.com/

No comments:

Post a Comment