நம் உயர்வு, நம் வளர்ச்சியில் உள்ளது., மற்றவர்களின் அழிவில் இல்லை.
நம்மை நாம் உயர்த்திக் கொள்ள முயல்வோம்.
மற்றவர்களின் அழிவில் நம் வாழ்வு இல்லை என அறிந்து கொள்வோம்.
இதனை உணர்ந்தால், நம்மிடம் தோன்றுவதெல்லாம் நேர் மறை எண்ணங்களே!
இந்த வழக்கமான சொல்லாடலில் கூட, சநாதன தர்மம் உள்ளது. கவனித்தோமா?
மறை என்றால் வேதம்.
நேர் மறை எண்ணங்கள் என்றால், வேத நெறிக்கு உடன் பட்ட எண்ணங்கள்.
எதிர் மறை எண்ணங்கள் என்றால், வேத நெறிக்கு விரோதமான எண்ணங்கள்.
அறிவின் ஆதாரம் பணிவு!
நம்மிடம் உள்ள பணிவு தொலைந்து போகாமல் காத்துக் கொள்வோம்.
வேத நெறி, நம் வாழ்வில், எத்துணை ஆழம் அடைந்திருந்தால், நம் சாமானிய சொல்லாடலில் கூட அதன் சுகந்தம் பரிமளிக்கும்!
சிந்திப்போம்.
நேர் மறை எண்ணங்கள் வளர பிரார்த்திப்போம்.
ராம்-ராம் 🙏
என் அளவில், அவன் செய்தது தவறு, அதனால் நான் அவனை வெறுத்தேன், அவனுடன் சண்டையிட்டேன், வன்முறையில் ஈடுபட்டேன்; என்பதெல்லாம் சப்பைக்கட்டு காரணங்கள்.
யார், நம்மை, எவ்வளவு தூண்டினாலும், நம்மிடம் எதிர் மறை எண்ணங்கள் எனும் விஷம் இல்லை எனில், அது வெளிப்பட வாய்ப்பில்லையே!
நம்மிடம் எதிர் மறை எண்ணங்கள் எனும் விஷம் இல்லை, இல்லவே இல்லை, எனில், யார், எவ்வளவு, தூண்டினாலும், நம்மிடம் இருந்து எதிர் மறை எண்ணங்கள் வெளிப்பட வாய்ப்பில்லையே!
இந்த நிலை சித்தித்தால், நாம் அமிர்த மயம் ஆகி விடுவோம். அதன் அடையாளமே, சந்நியாசம்.
இதுவே, நம் வாழ்வின் லட்சியம்.
https://sabariganesh23.sarahah.com/
No comments:
Post a Comment