நம்முடன்
இருந்து கொண்டே நம்மை அழிக்கவல்லது, நாம் வளர்க்கும் அஹங்காரம். ஆரம்பித்த இடத்தையும்,
கடந்து வந்த பாதையையும் மறப்பவன் மனிதனே அல்ல. வெற்றியும், செல்வமும், மனிதனுக்கு வரும்
சோதனைகள்.
வெற்றியும்,
தோல்வியும் நிலையில்லாதது. வெற்றியில் நிதானமும், தோல்வியில் துவளாமையும், நிம்மதியை
தரவல்லது. இன்று நாம் காணும் வெற்றியும், செல்வமும் ஆண்டவன் நமக்கு அளித்த பிச்சை என்றே
கொள்வோமெனில், நம்முடைய மனம் அடங்கும். மனம் அடங்கினால் மட்டுமே நிம்மதி பிறக்கும்.
நான் செய்வது
ஏதும் இல்லை; நான் என்பதே இல்லை. எல்லாம் அவன் செயல்.. கடல் அலையின் உயரத்தை நிர்ணயிப்பது
நிலாவின் ஈர்ப்பு திறனே அன்றி கடலின் திறமை அல்ல.
https://sabariganesh23.sarahah.com/
https://sabariganesh23.sarahah.com/
No comments:
Post a Comment