Friday, 18 November 2016

SGR37



எந்த தெய்வ உருவமும் நீதி, நேர்மை, நியாயம், தர்மம், சத்தியம் ஆகியவற்றின் வெளிப்பாடாக இருக்க வேண்டும்.
நீதி இருக்கும் வரை அநீதி இருக்கும்; நியாயம் இருக்கும் வரை அநியாயம் இருக்கும்; தர்மம் இருக்கும் வரை அதர்மம் இருக்கும்; சத்தியம் இருக்கும் வரை அசத்தியம் இருக்கும்; இவற்றை கடந்து செல்வதே மனித வாழ்வின் குறிக்கோள்; அதுவே அத்வைதம். தேவா...
போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும் போகட்டும் ஆத்மதேவனுக்கே. நான் செய்வது ஏதும் இல்லை; நான் என்பதே இல்லை; எல்லாம் ஆத்மதேவன் செயல். ஆத்மதேவா சரணம்.
எது எது போய்விடுகிறதோ அதை விட்டுவிட்டு;எது எது கிடைக்கிறதோ அதை எடுத்துக்கொண்டு; எந்த வித மனோ விகாரங்களும் இல்லாமல்;எல்லாம் ப்ரஹ்மமே என்று இருப்பதே தேவ பூஜை.
இருளை போக்கும் ஒரே மார்க்கம் ஞான விளக்கை ஏற்றுவதே; அன்றி இருளோடு யுத்தம் செய்வதில்லை.
அத்வைதம் பரமார்த்த சத்தியம். அகண்ட எகஸமாயுள்ள அது மனம், வாக்கு இவைகளுக்கு அப்பாற்பட்டது. எல்லாவற்றையும் கடந்த மெய்பொருள் எல்லாவற்றிலும் உள்ளது. அது ஒன்றே எல்லாமுமாக உள்ளது. அதுவே அத்வைதம். அதை துதிப்பதே ஞானம். ஆத்மதேவன் உத்தரவின்றி அணுவும் அசையுமோ? தேவா. சுயபரிசோதனையோ.? மனம் இறக்கட்டுமே தேவா. இன்றே... இப்போதே...ஓம்
https://sabariganesh23.sarahah.com/

No comments:

Post a Comment