Friday 17 October 2014

SGR50


திருமந்திரம்:
தெளிவு குருவின் திருமேனி காணுதல்,தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்,தெளிவு குருவின் திருநாமம் செப்புதல்,தெளிவு குருஉரு சிந்தித்தல் தானே.
தியானத்திற்கு மூலம் குருவின் வடிவம், பூஜைக்கு மூலம் குருவின் திருவடி, மந்திரத்தின் மூலம் குருவின் திருவாக்கு, மோக்ஷத்தின் மூலம் குரு க்ருபை.
ஸகுண உபாஸனையின் எல்லை குருவை தமது இஷ்ட தெய்வமாக காண்பதுதான். சத்குரு, பரமகுரு, பரமேஷ்டிகுரு, பராபரகுரு.
பெரும் பேறு வேண்டுபவன் ஆத்மஞானியை பூஜிக்க வேண்டும். - முண்டக உபநிஷத். ஆத்மஸாக்ஷாத்காரதிர்க்கு குருவை சரண் அடைவதை தவிர வேறு உபாயம் இல்லை. குரு பக்தியால் அடையமுடியாதது ஏதுவும் இல்லை.
சிஷ்யன் குருவின் நினைவுடன் அவரது திருவடிகளில் சரண் அடைந்தால்., குரு அருள் தக்க காலத்தில் தானாகவே கிடைக்கும். மெய்பொருளின் தரிசனத்திற்கு கடைசி படியாக அமைவது குருநாதரின் தரிசனமே.
தியானம் ஒன்றே முக்கியமான ஞானஸாதனமாகும். பூஜை, ஜெபம், தவம், தியானம். ஆத்மாவை அறிவது எப்படி என்றால்,அதை அறிய வேண்டாம்,ஏன் ஏனில் அதை அறிய முடியாது. மற்ற அனாத்ம வஸ்துக்களை அறிவதை நிறுத்தினால் போதும், ஆத்மா தானாகவே பிரகாசிக்கும். ஆத்மஸ்வரூபம் தான் நம்முடைய அறிவின் உதயஸ்தானமாக இருக்க வேண்டும்., மனம் அல்ல.
ஆத்மாவை தவிர வேறெதுவும் நிஜமல்ல. நிஜமாக தோன்றுவதெல்லாம் ஆத்மாவின் நிஜதன்மையால் அவ்வாறு தோற்றம் அளிக்கின்றன.. ஆத்மாவை அறியாதிருப்பதை காட்டிலும் கொடிய வியாதி வேறு இல்லை. எப்போதும் ஞானி ஆத்மாவையே காண்கிறான்.
https://sabariganesh23.sarahah.com/

No comments:

Post a Comment