பரத்தை
மறைத்தது பார்முதற் பூதம்;
பரத்தில்
மறைந்தது பார்முதற் பூதம்!
கல்லை
கண்டால் நாயை காணோம்;
நாயை
கண்டால் கல்லை காணோம்!
மரத்தை
மறைத்தது மாமத யானை;
மரத்தில்
மறைந்தது மாமத யானை!
பொன்னை மறைத்தது பொன்னணி பூடணம்;
பொன்னில் மறைந்தது பொன்னணி பூடணம்!
தன்னை மறைத்தது தன்கரணங்களே;
தன்னில் மறைந்தது தன்கரணங்களே!
அகம்
உணரபெற்றால் புறம் பொருட்டல்ல;
புறம்
பொருட்டாயின் அகம் உணராயே!
https://sabariganesh23.sarahah.com/
https://sabariganesh23.sarahah.com/
No comments:
Post a Comment