கற்பு எனப்படுவது
யாதெனில், எடுத்துக்கொண்ட லட்சியதினிலிருந்து விலகாதிருத்தல். சீடன் எனில், குருவினிடம்
பரிபூரண சரணாகதி அடைந்து இருத்தல். பரிபூரண சரணாகதியின் விளைவு, சிற்றறிவின் ஆதிக்கத்தில்
இருந்து விடுபடுவது ஆகும்.
எந்த ஒரு
பெண்ணுக்கும் கணவனே குருவின் ஸ்தானத்தில் இருக்கிறான். ஆகையால் தான், கணவனை பிரியாதிருத்தல்
கற்புடைய மங்கையரின் நிலைப்பாடு. இந்த மானுட வாழ்வு நிலையற்றது. நிலையற்ற வாழ்வுக்காக,
லட்சியத்தில் பிறழ்வது அறிவீனம். இந்த உலகத்தில், நாம் காணும் மரியாதை, அவமரியாதை,
சுகம், துக்கம் அனைத்தும் நிலையற்றது.
மரியாதை,
சுகம், செல்வாக்கு இவற்றுக்கெல்லாம் ஆசை பட்டு செயல் புரிவது அறிவீனம். மகாபாரத்தில்,
அரசன் கர்ணன் மிக உயர்ந்தவன்.
கவச - குண்டலங்களை
இழந்தால் உயிருக்கே ஆபத்து என உணர்ந்திருந்தும், இந்திரனுக்கு அதை சேமித்து கொடுத்துவிட்டான்.
காரணம், அவன் பிறவி லட்சியமான கொடையினிலிருந்து பிறழாமல் இருக்கவே. அதுவே, யுத்தக்களத்தில்,
பரமாத்மாவின் ஸ்வரூபமான கண்ணனுக்கே தானம் கொடுக்கும் மிக அறிய ஸ்தானத்தை பெற்றுக்கொடுத்தது.
தர்மத்தை
நிலை நாட்ட, பரமாத்மாவே, கர்ணனிடம் யாசிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது. தர்மத்தை நிலை
நிறுத்துவது, பரமாத்மாவின் கடமை. தர்மத்தை நிலை நிறுத்தியது கர்ணனின் கொடை. இதுவல்லவோ,
கர்ணனின் உயர்வு. கற்பின் பெருமை..
https://sabariganesh23.sarahah.com/
https://sabariganesh23.sarahah.com/
No comments:
Post a Comment