Saturday, 18 October 2014

SGR74


நினைப்பு தான் பிறப்பு. ஒரு ஜீவன் உடலை விட்டு பிரியும் பொழுது எவ்விதமான எண்ணத்துடன் இருக்கிறதோ, அந்த எண்ணத்திற்கேற்ப அடுத்த ஜென்மம் அமையும்.
ஒரு உயிரை செயற்கை முறையில் உருவாக்குவது செயற்கரிய செயல் அல்ல. ஸ்ரிஷ்டியின் படைப்பாளியான பிரமன் இருக்கும் பொழுதே, தன் தவ வலிமையினால் விஸ்வாமித்திரன் ஒரு தனி ஸ்வர்கத்தையே உருவாக்கினான்.
விஸ்வாமித்திரன் பொய் என்றால், காளிதாசன் எழுதிய சாகுந்தலமும் பொய், வஷிஷ்டனும் பொய், ராமனும் பொய், மகாபாரதமும் பொய் என்றாகிவிடும். இன்றும் கடலுக்கடியில் துவாரகையும், நள சேதுவும் உள்ளனவே. ஆகவே, ஒரு ஜீவனுக்கு பல ஜென்மங்கள் உண்டு என்பது உண்மை.
நான் செய்கிறேன் என்ற கர்த்ருத்வத்துடன் செய்யப்படும் எந்த செயலும் கர்மாவை அதிகப்படுத்தும். கர்மா உள்ள வரையிலும் ஜென்மம் உண்டு. தவிர்க்கமுடியாதது.
கர்மாவை தீர்க்கவேண்டுமெனில், புதிய கர்மா சேராமல் காக்கவேண்டுமெனில்., கர்த்ருத்வம் இல்லாதிருக்க வேண்டும். நான் செய்கிறேன் எனும் நினைப்பே கர்த்ருத்வம் ஆகும். அதை போக்கிக்கொள்ளவே, குருவின் துணை அவசியம்.
குருவானவர் சீடனுக்கு செய்யும் உபகாரம் அளவிடமுடியாததாகும். பல ஜென்மங்களில் தவம் செய்து பெற்ற அறிய ஞானம் எனும் பொக்கிஷத்தை,குருவானவர் தம்மை சரண் அடைந்த சீடனுக்கு உள்ளங்கை நெல்லிக்கனி போல் வழங்குகிறார்
இந்த பேருபகாரத்திற்கு எந்த சீடனாலும் குருவிற்கு கைமாறு செய்துவிடமுடியாது. குருவின் துணை இன்றி ஆத்மஞானத்தை அடையமுடியாது. யானைக்கு தும்பிக்கை எப்படியோ, அப்படியே மனிதருக்கு நம்பிக்கை.
https://sabariganesh23.sarahah.com/

No comments:

Post a Comment