தேவ பூஜை
எது எது
போய்விடுகிறதோ, அதை விட்டு விட்டு, எது எது கிடைக்கிறதோ, அதை எடுத்துக்கொண்டு, எவ்வித
மனோவிகாரங்களும் இல்லாமல், எல்லாம் ப்ரஹ்மமே என்ற தீர்மானத்துடன் இருப்பதே உத்தமமான
பூஜை. வந்தாலும் ஏன் என்ற கேள்வி இல்லை, போனாலும் ஏன் என்ற கேள்வி இல்லை. ஸ்தித ப்ரக்ஞன்.
ஜீவ காருண்யம்
இல்லாமல் தெய்வீக வாழ்க்கையில் முன்னேற முடியாது. உற்றார் உறவினரிடம் உண்டாகும் வாஞ்சை
மாயை. எல்லா ஜந்துக்களிடமும் உண்டாகும் வாஞ்சை தயை..
ஈஸ்வரன்,
குரு, ஆத்மா இம்மூன்றும் ஒன்றே. மூர்த்தி வேறாக தோன்றினாலும், ஆகாசத்தைப்போல் நீக்கமற
நிறைந்த அகண்ட சச்சிதானந்த வடிவமே குருவின் உண்மை வடிவமாகும். தனது மனமாகிய மலரை குருபாதங்களில்
பூரணமாக சமர்பித்துவிடுவது கடினம். ஆனால் அதுதான் மிகவும் சிறந்தது. அதற்கு பெயர் தான்
சிரத்தை.
நான் செய்வது
ஏதும் இல்லை., நான் என்பதே இல்லை., எல்லாம் அவன் செயல்., தேவா... சத்குரு மூர்த்தியின்
பாதுகைகளில் இருந்து தான் ஓம்கார மூர்த்தியை (ஆத்மசாக்ஷாத்காரத்தை) அடைய முடியும்.
குருவின் துணை இன்றி அதை நேரிடையாக அடைய முடியாது. ஏனவே குரு பாத சேவை தான் முக்கியம்.
யானைக்கு தும்பிக்கை எப்படியோ அப்படியே மனிதருக்கு நம்பிக்கை.
கடவுளை
தமது ஸ்வரூபத்திலேயே கண்டவர், வேறு எதையும் விரும்புவது இல்லை., கடவுளையும் விரும்புவது
இல்லை. எவ்வளவு அழகிய மேனி இருந்தால் என்ன., எவ்வளவு அழகிய மனைவி-மக்கள் இருந்தால்
என்ன., ராஜ்ஜியம்., வித்யை., எல்லாம் இருப்பினும்., ஸ்ரீ குருவின் பாதங்களில் மனம்
லயிக்காவிட்டால் எல்லாம் வீணே.
வித்தைக்கு
அணிகலன் விநயமே. எல்லாவற்றிற்கும் பாவனை வேண்டும். அதுவே சிறப்பு. அதுவே நம்பிக்கை.
https://sabariganesh23.sarahah.com/
https://sabariganesh23.sarahah.com/
No comments:
Post a Comment