சத்குரு
மூர்த்தியின் பாதுகைகளில் இருந்து தான் ஓம்கார மூர்த்தியை சாக்ஷாத்கரிக்க முடியும்.
குருவின் துணை இன்றி ஒருபோதும் இதை நேரிடையாக அடைய முடியாது.
குரு என்பவர்,
பண்டிதரோ, மத பிரசாரகரோ இல்லை. உள்கனம் பொருந்தியவரே குரு. எவரும் குருவை தேடி கொள்ள
வேண்டியதில்லை. சிஷ்யன் பக்குவம் அடைந்தால், குருவின் அருள் தானாக சிஷ்யனை தேடி வரும்.
குருவின் கிருபையை அடைய, நாம் செய்ய வேண்டியது என்னவெனில், நம்மை நாமே பக்குவ படுத்தி
கொள்ள வேண்டியதே.
பக்குவ
பட்ட மனத்தின் வெளிபாடு தான் அடக்கம் எனும் பணிவு எனும் விநயம். நமக்கு பிடித்த ஏதாவது
ஒரு தெய்வ உருவத்தை சங்கல்பித்து அதனிடம் முழுமையாக நம்மை அர்பணித்து விட வேண்டும்.
காரணம் அற்ற நம்பிக்கையே சரணாகதியின் வெளிப்பாடு.
https://sabariganesh23.sarahah.com/
https://sabariganesh23.sarahah.com/
No comments:
Post a Comment