தவறான முறையில்
தொழில் செய்து, அதில் வரும் நிதியை கொண்டு கொடை செய்வது அறிவீனம்; பாபம்.
தான் புரியும்
கொடை நற்பயன் அளிக்க வேண்டுமெனில், அதற்கு பயன்படுத்தப்படும் நிதியும் நன்முறையில்
ஈட்ட பட்டிருக்க வேண்டும்.
நாம் செய்யும்
தொழில், அடிப்படையில் குற்றமில்லா கலையாக இருப்பினும்; அதில் நம்முடைய ஈடுபாடு, பங்கீடு
மற்றும் செயல்கள் குற்றமற்று இருத்தல் அவசியம்.
நாம் செய்யும்
ஒவ்வொரு செயலின் உண்மைத்தன்மையை நம்முடைய மனசாட்சி நமக்கு பிழையின்றி பகன்றுவிடும்.
ஒவ்வொரு
மனிதனும் தன்னுடைய மனசாட்சியின் குரலை, தன் தர்க்க அறிவின் துணைக்கொண்டு விதண்டை புரிந்து
அடக்கும் பொழுது பாபத்திற்கு விதை விதைக்கபடுகிறது.
https://sabariganesh23.sarahah.com/
https://sabariganesh23.sarahah.com/
No comments:
Post a Comment