Friday, 17 October 2014

SGR46


ஒழுக்கத்தின் முதல் படி பணிவு, அடக்கம், விநயம். மனம் நின்றால்தான் ஆத்மா பிரகாசிக்கும். எண்ணங்களின் ஓட்டமே மனம். மனதிற்கு இருப்பு கிடையாது. மனம் குரு பக்தியில் நனைந்தால் பலன் நிச்சயம்.
நாம் ஒருவரை குரு என வரித்த பின் அவரது யோக்யதா அம்சங்களை பார்க்க கூடாது. சரணாகதியே முக்கியம். நம்முடைய நம்பிக்கை, சரணாகதி உண்மையெனில், குரு மூலமாக கிடைக்க வேண்டியது ஈஸ்வர பிரசாதமாக கிடைத்து விடும்.
ஒவ்வொரு மனிதருக்கும் சத்குரு, பரமகுரு, பரமேஷ்டிகுரு, பராபரகுரு என்ற குரு பரம்பரை உண்டு. யானைக்கு தும்பிக்கை எப்படியோ அப்படியே மனிதருக்கு நம்பிக்கை.
வைதீக கர்மா மற்றும் பக்தியின் உன்னத குறிக்கோள் சித்த சுத்தி. பலனை ஏதிர்பார்க்காமல் செய்யப்படும் செயல்கள் சித்த சுத்திக்கு வழி வகுக்கும். சித்த மலம் அகன்றால் மனம் தெளியும். மனம் தெளிந்தால் அடங்கும். மனம் அடங்கினால் ஆத்மா பிரகாசிக்கும்.
குருவை விட ஸ்ரேஷ்டமானவர் ஏவரும் இல்லை என்ற திட நம்பிக்கை முக்கியம். குரு கிடைத்துவிட்டால் தெய்வம் கூட தேவை இல்லை. தெய்வம் கோபித்தால் குரு காப்பாற்றுவார். குருவே கோபித்தால், வேறு கதி இல்லை. குருவே சரணம். குரு பக்தியால் அடைய முடியாதது ஏதுவும் இல்லை.
தெய்வம் எங்கும் நீக்கமற நிறைந்து உள்ளது. நாம் தெய்வத்திலேயே நிலை பெற்று உள்ளோம். பூர்ண நம்பிக்கையும், சரணாகதியும் இருப்பின் அனுபவம் சித்தமாகும். நிச்சயம். தன்னை தானே உணரவே மானுட வாழ்க்கை. ஆத்ம ஞானம் ஏய்திடவே மானுட வாழ்க்கை.
மானுட வாழ்க்கையின் செயல் குறிக்கோள் குருவை அடைவதே. குரு இல்லாமல் ஆத்ம ஞானம் அடைய முடியாது. நாவை கட்டினால் மனம் அடங்கும். சுவையிலும், பேச்சிலும்; தன்னுடைய நாவை வென்றவன் மட்டுமே உண்மையில் அமைதி அடைகிறான்.
நம்மை அன்றாடம் பீடிக்கும் பசி எனும் வியாதிக்கு; உணவு எனும் மருந்து.
https://sabariganesh23.sarahah.com/

No comments:

Post a Comment