Friday, 17 October 2014

SGR55


மானுட வாழ்வின் லட்சியம், குருவை அடைவதே. ஒவ்வொரு மனிதருக்கும் குரு உண்டு. சத்குரு, பரமகுரு, ஜகத்குரு. குருவின் பாதத்தில் தான் ஆனந்தம் சித்திக்கும். சந்தோசம்-துக்கம் இவைகளை கடந்தால் ஆனந்தம். அத்வைதம் ஆனந்தம்.
காதற்ற ஊசியும் வாராது காணும் கடைவழிக்கே. குருவை சரண் அடைவதை தவிர வேறு உபாயம் இல்லை. ஆனந்தம் குருவின் பாதத்தில்.
யானைக்கு தும்பிக்கை எப்படியோ; அப்படியே மனிதருக்கு நம்பிக்கை. குருவிடம் சிஷ்யன் பரிபூரண நம்பிக்கையுடன் சரண் அடைந்தால் ஆனந்தம் நிச்சயம். நம்பிக்கையே சகலமும்.
ஆசாரியர் ஒரு நியதி வழி நடப்பவர். குரு எல்லா கட்டுப்பாடுகளுக்கும் அப்பாற்பட்டவர். குருவும் சிஷ்யனும் இணைபிரியாத தம்பதி போன்றவர்கள். ஐக்கிய நிலைக்கு முன்னேறுபவர்கள். குருவும் சிஷ்யனும் பரஸ்பர சம்பந்தத்தால் ஒன்று பட்டு நிலைக்கின்றனர்.
https://sabariganesh23.sarahah.com/

No comments:

Post a Comment