Saturday, 18 October 2014

SGR75


மனம் நின்றால்தான் ஆத்மா பிரகாசிக்கும். குருவை விட ஸ்ரேஷ்டமானவர் இல்லை. நாம் பக்தி செய்வதால் ஈஸ்வரனுக்கோ, குருவுக்கோ ஒரு லாபமும் இல்லை; நமக்கே தான் பெரிய லாபம். மனம் குருபக்தியில் நனைந்தால், உடனே பலன் உண்டாகும். குரு பக்தியால் சாதிக்க இயலாத காரியமும் உண்டோ?
பலனை எதிர்பார்க்காமல் காரியம் செய்யும் போது, காரியத்தின் பலன் என்பதை விட, சித்த சுத்தி எனும் மிக பெரிய பலன் உண்டாகும். ஒழுக்கத்தின் முதல் அங்கம் பணிவு எனும் அடக்கம் எனும் விநயம். குருகுலவாசத்தில் பயிலும் மாணவனை ஆகையால் தான் விநேயன் என்பது.
சலனத்தின் எதிர்பதம் சாந்தம். குரு என்று ஒருவரை தேடி அலைவது நம் கடமை. இங்கே அலைவது என்றால் மனதில் பிரார்த்தனை செய்வது என்று பொருள். குரு என்று ஒருவரை வரித்தபின், அவருடைய யோகியதாம்சங்களை பார்க்க கூடாது. குருவிடம் லாப நஷ்ட கணக்கு பார்க்க கூடாது.
உலகத்தில் லாபம் நஷ்டம் என்பது உண்மையில் நிரந்தரமாக இல்லை. அவை சிறிது காலம் இருப்பது போல் தொன்றுவனையே. யோகியதை இல்லாத குருவிடம் அடங்கி இருந்தாலே மனம் நிரம்ப பக்குவமடையும். ஈஸ்வரன் நம்மை பரீட்சித்து மனதின் பக்குவத்தை திடபடுத்தவே இப்படி ஏற்பட்டிருக்கிறது.
நமக்கென்று லாப நஷ்டம் பார்க்காமல், குரு என்று ஒருத்தரை நம்பி சரண் அடைந்து விட்டால், ஈஸ்வரன் முடிவில் பரம லாபமான ஆத்மஞானத்தை கொடுத்துவிடுவான்.
https://sabariganesh23.sarahah.com/

No comments:

Post a Comment