Saturday, 18 October 2014

SGR130


மனிதனின் உடலை அழகென்று உரைத்தவன் எவனோ? அதிலும் பெண்ணின் உடலை அழகின் உச்சம் என்று உரைத்தது தகுமோ?
பீழை வழியும் கண்கள்; சளி ஒழுகும் நாசிகள்; அழுக்கடைத்த செவிகள்; எச்சில் நாற்றம் வீசும் வாயும்; பால் வாடையுடன் கூடிய கொங்கைகள்; சற்று கீழே கவனித்தாலோ, மலம், மூத்திரம், ரத்தம்; உடலெல்லாம் வியர்வையின் நாற்றம்!
ஒரு ஜீவன் பிரிந்த உடலோ; ஒரே நாளில் புழு-பூச்சி அடைந்து நாற்றமெடுத்துவிடும்!
அப்படியெனில் ஏதைதான் ரசிப்பது? அந்த உடலில் இருக்கும் ஜீவனின் மனதை – சாத்வீகமான எண்ணங்களை ரசிக்கலாமே!
ஆனால், மனதின் எண்ணங்களும் மாறுதலுக்கு உரியவை அன்றோ!?!!
ஒரு பெண்ணின் உடலை ரசிப்பவன் ஏமாளி; மனதை ரசிப்பவன் கோமாளி; எந்த ஒரு ஜீவனையும், தன்னுடைய சைதன்யத்தின் பிரதிபலிப்பாக ரசிப்பவனே ஞானி.
எந்த ஒரு சராசரி மனிதனும் பிறக்கும் பொழுது, ஏமாளி; வாழ்வில் சற்று  அடிபட்டு, மிதிப்பட்டு நொந்து, அனுபவம் அடைந்தபின், கோமாளி; குருவின் அருள் கிடைக்க பெற்றவனே ஞானி ஆகிறான்.
இந்த வையகத்தில் ஏமாளிகளுக்கும், கோமாளிகளுக்கும் பஞ்சமே இல்லை. ஞானி ஆகவேண்டுமெனில், குருவின் பாதத்தில் சரண் அடைய வேண்டும்; இல்லையெனில், வாழ்க்கை முழுவதும் ஏமாளி – கோமாளிதான்! ஹா ஹா ஹா … தேவா…
மனித உடலின் அழகை ரசிப்பவன் ஏமாளி; காரணம் அது நிலையற்றது; அழியக்கூடியது; அழியவேண்டியது; இலவு காத்த கிளி தான்!
மனிதனின் மனதை ரசிப்பவன் கோமாளி; காரணம் மனம் ஒரு ஈயை போன்றது, அது ஒரு சமயம் ருசி நிறைந்த சாத்வீகமான உணவில் அமர்ந்து மயக்கும்; அடுத்த கணம் தாமச மலத்தில் அமர்ந்து வேதனைப்படுத்தும்!
மனிதன் தன் மனதை ரசிக்க கூடாது; அதை ஆளவேண்டும்! அதுவும் குறிப்பாக சாத்வீகமான முறையில்; அதற்குதான் குரு தேவை!

https://sabariganesh23.sarahah.com/

No comments:

Post a Comment