Saturday, 18 October 2014

SGR81


ஆன்மீக பயணத்தின் ஒரு நிலையில், வெட்கம், மானம், ரோஷம் போன்ற உணர்சிகள் போய்விடத்தான் வேண்டும். சந்நியாசிக்கு நியதி ஒரு வேளை உணவு; அதிலும் உணவில் உப்பை விலக்கி அலவனமாக சாப்பிட வேண்டும். சகல விதமான உணர்சிகளை தூண்டிவிட வல்லது உப்பு மட்டுமே.
நாம் நல்ல எண்ணங்களை வளர்த்துக்கொள்ள வேண்டும். நல்லது என்றால், ஈஸ்வரன் தான் நல்லது. இவ்வுலகத்தில் தோன்றும் வேறு எதுவுமே நல்லதில்லை.
பிச்சை எடுக்க அதிகாரம் உள்ள ஒரே பிரிவு பிராமணன் மட்டுமே. காரணம் வேதம் ஓத பணிவு வேண்டும். பிச்சை எடுத்து ஜீவிக்க வேண்டும் என்ற நியதி வகுத்தது பணிவு வளர வேண்டும் என்பதற்கே.
https://sabariganesh23.sarahah.com/

No comments:

Post a Comment